1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (14:32 IST)

ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு..!

akilesh
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவடையும் வரை ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மோடியை வீழ்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தியா கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக சிதறி வரும் நிலையில் இந்த கூட்டணியில் இருந்து அகிலேஷ் யாதவ் விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி யாத்திரை செய்து வரும் நிலையில் இந்த யாத்திரை உத்தரபிரதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரியில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வார் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது திடீரென அவர் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடியும் வரை ராகுல் காந்தி யாத்திரையில் சமாஜ்வாதி கட்சி பங்கேற்காது என்று அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் ஒரு இடம் கூட கொடுக்க முடியாது என்றும் இந்த நிபந்தனையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவரது நடைப்பயணத்தில் கலந்து கொள்வேன் என்றும் அகிலேஷ் யாதவ் கூறியதாக தகவல் கசிந்து உள்ளது

Edited by Mahendran