புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:33 IST)

சினிமா படப்பிடிப்புகள் ரத்து –ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

பெட்போர்டு வண்டிகளில் சினிமா படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றாமல் வாடகைக் காரில் ஏற்றி சென்றதால் நேற்று முழுவதும் சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

வடபழனியில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவுப் படப்பிடிப்பாக நடந்த விளம்பர படப்பிடிப்பின் போது கேமரா மற்றும் சில கருவிகளை வாடகைக் காரில் ஏற்றி அனுப்பியுள்ளனர். இதற்கு வழக்கமாக கருவிகளை ஏற்றி செல்ல்லும் பெட்ஃபோர்டு வாகனங்களின் ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் யூனியன் வாகனங்களில் ஏற்றாமல் மற்ற வாகனத்தில் ஏற்றியதற்காக படப்பிடிப்புகளை புறக்கணித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் வாகனங்களின்றி சாதனங்கள் ஏற்றிச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே நேற்று முழுவதும் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் சென்னையில் நேற்று நடைபெற இருந்த விஷாலின் அயோக்கியா, லாரன்ஸின் காஞ்சனா-3, விக்ரம் பிரபு நடிக்கும் அசுரகுரு, விமல் நடிக்கும் ‘இவனுக்கு என்கயோ மச்சம் இருக்கு’ மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்த பிரச்சனை சம்மந்தமான பேச்சு வார்த்தை நேற்றிரவு தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்ஃபி நிட்வாகிகள் இடையே நடைபெற்றது.