ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:24 IST)

டெல்டா விசிட்: பாதியிலேயே திரும்பும் முதலமைச்சர்; என்ன காரணம்?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி பாதியிலேயே சென்னை திரும்புகிறார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பனை, வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்துள்ளன.
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிரன்றே கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு செல்லவிருந்த எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் அந்த பிளானை கேன்சல் செய்தார். அங்கு போனால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பயந்தே எடப்பாடியாரின் டிரிப் ரத்தானது என சொல்லப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து இன்று கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருச்சிக்கு புறப்பட்டனர். 
 
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்பட்டது.
 
ஆனால் புதுக்கோட்டை, தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல்  பாதியிலேயே திருச்சி திரும்பிவிட்டனர். பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை இயக்க முடியாது என்பதால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனால் அந்த பகுதி மக்கள் கடும் கோபமாக இருப்பதால், எடப்பாடியார் அங்கு சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதாலேயே அவர் அங்கு செல்லவில்லை என பலர் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.