தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
ஆளுநர் ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போட வேண்டும். அவ்வாறு போடாவிட்டால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, பாஜகவை போல் அவர் செயல்படுவதையே காட்டுகிறது. அமலாக்க துறையை தனது கிளை அலுவலகம் போல் பாஜக மாற்றி உள்ளதால் தனது முடிவு சரியானது என்று அவர் கூறியுள்ளார்.
மாநில அரசு நிர்வாகம் சமூகமாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது என செயல்படுகிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Siva