கும்பமேளா முடிந்த அடுத்த நாளில் இருந்தே முழு ஊரடங்கு?
கும்பமேளா முடிந்த அடுத்த நாளில் இருந்தே முழு ஊரடங்கு?
கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கும்பமேளா நேற்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து இன்று அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா தொடங்கியது/ அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதனால் கொரோனா மிகப் பெரிய அளவில் பரவியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கும்பமேளா நாட்களை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் நேற்றுடன் கும்பமேளா நிகழ்ச்சி முடிவடைந்தது அறிவிக்கப்பட்டது
நேற்று நடந்த புனித நீராடல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த நிலையில் ஹரித்துவார் உள்பட ஒருசில மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த நிலையில் கும்பமேளா முடிந்ததை அடுத்து பக்தர்கள் அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது