கேரளாவில் முழு ஊரடங்கா? அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவு!
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா? என நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது
இந்த ஆலோசனையின் முடிவில் கேரளாவில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
இதனை அடுத்து கேரளாவில் இப்போது முழு ஊரடங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் பார்கள் பெரிய ஷாப்பிங் கடைகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேரள அரசு விரைவில் இந்த கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கேரள மக்கள் பெரும் பரப்பில் உள்ளன