விக்ரம் படத்தின் மூலம் தமிழகத்தில் திரையரங்குகள் மூலம் கமல் சம்பாதித்தது இவ்வளவா?
தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு பெரும் லாபம் கிட்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.
தமிழகத்தில் பேய் ஓட்டம் ஒடிய விக்ரம் திரைப்படம் இதுவரை எந்தவொரு தமிழ்ப் படமும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் தயாரிப்பாளரின் பங்காக சுமார் 98 கோடி ரூபாயை படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் பெற்றுள்ளாராம். இதுவரை எந்த ஒரு படமும் இவ்வளவு தொகையை ஷேராக பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் விஜய்யின் சில படங்கள் கூட 75 கோடியைத் தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.