திரையரங்குகளை குத்தகை எடுக்கும் பிரபல நடிகர்… திடீர் முடிவு!
நடிகர் சூர்யா சமீபகாலமாக அவரின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறார். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவர் மேல் கோபமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சூர்யா சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதையடுத்து அடுத்த ஆண்டும் அவர் ஜெய்பீம் படத்துக்காக விருது பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் கைவசம் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கும் படம் மற்றும் வாடிவாசல் என வரிசையாக முன்னணி இயக்குனர்களின் படங்கள் உள்ளன.
இந்நிலையில் இப்போது சூர்யா ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளார். விரைவில் அவர் சில திரையரங்குகளை லீசுக்கு எடுத்து நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.