1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:53 IST)

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி, ஜோஷி வரவேண்டாம்: அறக்கட்டளை சொன்னது ஏன்?

Advani
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் 4000 சாமியார்கள் 2200 சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அத்வானிக்கு 96 வயது ஆவதாலும், ஜோஷிக்கு  90 வயது ஆவதால் இருவரும் வயதை கணக்கில் கொண்டு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வயது  காரணமாக வரவேண்டாம் என்று அத்வானி, முரளி ஆகிய இருவரும் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறக்கட்டளை இவ்வாறு கூறியிருப்பது சரியில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும்  இருவரும்  அயோத்திக்கு வர வேண்டும் என்றும் இது அறக்கட்டளைக்கு பேரிடியாக அமையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva