புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (21:10 IST)

ஆபத்தை உணராமல் ’டிக்டாக் ’ கிற்கு அடிமையான இளைஞர்கள் !

இன்றைய நவீன உலகில் எல்லோருமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிற வாய்ப்பு கிடைத்துவிட்டது.  அதிலும் சமூக  வலைதளங்களில் தங்கள் புகைப்படம் ஸ்டேட்டஸ் போன்றவற்றைக் காட்டுவதற்காக வரம்பு மீறும் இளைஞர்கள் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிக் டாக் வீடியோ செய்து பலரையும் கவர வேண்டும் என்பதற்காகப் பலரும் அபாயகரமான செயலை செய்து வருகின்றனர்.
 
இதில்  துப்பாக்க்கியை பயன்படுத்துவது, தூக்கில் தொங்கியது, போலீஸ் ஸ்டேசனில் செய்வது போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபட்டுவந்தனர்.
 
இந்நிலையில்  மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுரா பிரிட்ஜில் , இளைஞர்கள் இந்த பாலத்தில் அம்ர்ந்து செல்பி டிக்டாக் எடுப்பது போன்ற வீடியோ எடுத்து ஆபத்தான செயலில் இறங்கியுள்ளனர். இந்தப் பாலத்தில் கீழ் உள்ள ஆற்றின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதை தெரிந்துகொண்டுதான் இளைஞர்கள் ஆற்றில் குதித்தும் விளையாடுகின்றனர்.
 
சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு வீடியோவிற்கு டிக் டாக் செய்த நபர், கீழே விழுந்து கழுத்து முறிந்தது குறிப்பிடத்தக்கது.