நாட்டின் மிக நீளமான அடல் சேது பாலம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
நாட்டின் மிக நீளமான பாலமான அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார. ரூ.17,840 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடல் சேது பாலம், மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான பயண நேரத்தை 20 நிமிடமாக குறைக்கிறது என்பதும், 21.8 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் நாட்டின் மிக நீண்ட பாலமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக இந்த பாலத்திற்கு அடல் சேது என பெயரிடப்பட்டிருக்கிறது.
மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மும்பை மற்றும் நவி மும்பை இடையே பயணிக்க இரண்டு மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தை அடல் சேது பாலம் வெகுவாக குறைக்கிறது.
இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். இந்த பாலம் மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான பயணத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் உதவும்.
Edited by Siva