அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம்! அதானி அதிரடி அறிவிப்பு..!
அமெரிக்காவிடம் இருந்து பெற்ற முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம் என்று அதானி நிறுவனத்தின் கிளை நிறுவனங்களில் ஒன்றான அதானி கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளிடம் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தத்தை பெற ₹2,100 கோடி அதானி லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படும் நிலையில், அதனை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று அதானி நிறுவனத்தின் பங்குகள் குறைந்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறை மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆலயம், அதானி நிர்வாக குழு உறுப்பினர்கள் கௌதம் உள்பட ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இதனால், அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம் என்று அதானி கிளை நிறுவனங்களில் ஒன்றான அதானி க்ரீன் அறிவித்துள்ளன. அதேசமயம், "இதனை அனைத்து கிளை நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனவும் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதானி நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ₹25,000 கோடி பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran