திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (17:31 IST)

பாஜக வேட்பாளராகும் கமல், ரஜினி பட நடிகை.. கேரள அரசியலில் பரபரப்பு..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களுடன் நடித்த நடிகை கேரளாவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கமல்ஹாசன் நடித்த ’எனக்குள் ஒருவன்’ ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை ஷோபனா . இவர் நாட்டிய பேரொளி பத்மினியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகை ஷோபனா அரசியலில் குதிக்க இருப்பதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் பாஜகவும் அதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
திருவனந்தபுரம் தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில் அவரை தோற்கடிக்க வியூகம் அமைந்துள்ள பாஜக இந்த முறை நடிகை ஷோபனாவை அவருக்கு எதிராக களம் இறக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran