வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:16 IST)

''விஜய் தீவிர அரசியல் பேசும் வரை முதலில் அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்'' -மக்கள் நீதி மய்யம்!

vijay -kamal
''விஜய் அவர்கள் தீவிர அரசியல் பேசும் வரை முதலில் அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்திபிரிவு தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சி,தொடங்கி 7 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில்  காங்கிரஸுடன் இணைந்து திமுக கூட்டணியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக வரவேற்பேன் என்று  நடிகர் கமல் பேட்டியளித்திருந்தார்.
 
இந்த  நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்திபிரிவு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

''தமிழக வெற்றிக் கழகம்கட்சித்தலைவர் விஜய் அவர்களின் தொண்டர்களே,
 
எங்கள் நம்மவர் திரு.விஜய் அவர்களை பெரிதும் மதிக்கிறார். விஜய் அவர்களை அரசியலுக்கு வாருங்கள் என்று முதல் குறள் கொடுத்தவரும் அவரே… ஆதால், அந்த நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் பேசிவருவது கண்டனத்துக்குரியது.

உண்மையான அரசியலுக்காக போராடுங்கள். வீண் பிரச்சனையை தவிருங்கள். நமக்குள்ளேயே சண்டை போட்டு கொள்ளவேண்டும் என்பதே பலருடைய ஆசையாக இருக்கும்… அதை பூர்த்திசெய்ய உதவாதீர்கள்…
 
 விஜய் அவர்கள் தீவிர அரசியல் பேசும் வரை முதலில் அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்…'' என்று தெரிவித்துள்ளார்.