வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மே 2024 (11:41 IST)

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை.. மோடி கொள்கையால் ஈர்க்கப்பட்டதாக பேட்டி..!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை பாஜகவில் சேர்ந்த நிலையில் மோடியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டதாகவும் அமித்ஷாவுடன் இணைந்து பணிபுரிய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட திரை உலக பிரபலங்கள் பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மேற்குவங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை ரூபாலி கங்குலி என்பவர் நேற்று பாஜகவில் இணைந்தார். திரைப்படங்களிலும் டிவி சீரியல்களிலும் பிரபலமாக நடித்து வரும் இவர் தற்போது மும்பையில் இருக்கும் நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் என்பவர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’பிரதமர் மோடி நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கொண்டு வந்த திட்டங்களை பார்த்து தனக்கு ஈர்ப்பு உண்டாகியதாகவும் தெரிவித்தார்

மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என்றும் பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய பாஜகவில் இணைந்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva