வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 மே 2024 (09:37 IST)

பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் மாதம் ரூ1500 உதவித்தொகை! – பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை!

Chandrababu Naidu
ஆந்திராவில் மக்களவை தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டியிடும் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.



ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றன.

இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பாஜக கூட்டணி தற்போது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு ரூ.1500ம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500ம் உதவித்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தனியாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து, ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15000 ஆகிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K