திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:49 IST)

தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாத குஷ்பு.. தெலுங்கானாவில் மட்டும் பிரச்சாரம் ஏன்?

தமிழகத்தில் சில நாட்கள் மட்டும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பூ அதன் பின்னர் உடல்நிலை காரணமாக பிரச்சாரம் செய்யவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு திரட்டுவேன் என்றும் கூறியிருந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு குஷ்பு தற்போது பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ பல பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் உடல்நிலையை காரணம் காட்டி பிரச்சாரம் செய்யாத குஷ்பூ தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதியில் போட்டியிட குஷ்பூ விண்ணப்பம் செய்திருந்ததாகவும் ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva