வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (08:47 IST)

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய குஷ்புவுக்கு- நடிகை அம்பிகா கண்டனம்.

குடும்ப தலைவிகளுக்கான தமிழக அரசின் மகளிர் உரிமை தொகையாக  மாதம் ரூ -1000 வழங்கப்பட்டு வருகிறது
 
இந்த 1000-ரூபாயை வாங்கும் பெண்கள் பிச்சைக்காரிகள் என்று சமீபத்தில் பேசியுள்ளார் நடிகை குஷ்பூ 
 
இதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் மகளிர் அமைப்பினார் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்நிலையில் நடிகை அம்பிகா...
 
" யார்..எந்த கட்சி யென்றதெல்லாம் தாண்டி மக்களுக்கு யார் உதவினாலும், ஆதரவா இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டும், பாராட்டவும் வேண்டும் . 
 
அதை வரவேற்க  மனசில்லைனா வேற எதையும் பேசக்கூடாது.
 
சாதாரணமாக ஒரு ஐந்து ரூபாய் உதவியாக இருந்தாலும் அதை ஏன் பிச்சை அப்படின்னு சொல்லி மக்களை இழிவுப்படுத்தணும்.." என்று கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை அம்பிகா.