திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (23:23 IST)

நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் மும்பை மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் இந்த பரிசோதனையின் முடிவு சற்று முன் வெளியான நிலையில் இருவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் அமிதாப், அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
 
அமிதாப் குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இருப்பினும் நால்வருக்குமே இலேசான அறிகுறிதான் என்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் இன்று அமிதாப் பச்சம் தான் குணமடைந்துவிட்டதாக தனக்காக பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
இந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் மும்மை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.