வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (19:14 IST)

வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்துத் தைத்த மருத்துவர்…. அரசு மருத்துவரின் அலட்சியம்!

கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு வயதானவரின் வயிற்றில்  கத்திரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கனிமங்கலம்  பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் பால் ( 55). இவருக்கு கணையத்தில் தொற்று இருந்ததால் போதிய பண வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை செய்துள்ளார்.
ஆனால் இந்த அறுவைச் சிகிச்சையின் போது சீனியர்மருத்துவர் ஒருவர் கவனக் குறைவாக இருந்ததால் கத்திரிக்கோலை ஜோசல் பாலின் வயிற்றில் வைத்து கவனக்குறைவாக தைத்துவிட்டதால் அதை அகற்ற மீண்டும் அறுவைச் சிசிச்சை செய்துள்ளார்.
பின்னர் ஜோசப் பாலிற்கு வயிற்றில் வலி எடுக்கவே அவர்  வேறொரு மருத்துவமனைக்குச் சென்று வயிற்றை ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அது வெளியே எடுக்கப்பட்டது. இதுகுறித்து ஜோசப் பாலின் குடும்பத்தினர் அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது புகார் தெரிவித்து வருகின்றனர்.