1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (17:01 IST)

தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த பிரபல நடிகர் கைது!

arrested
தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த பிரபல நடிகர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
பெங்களூரு ஜேபி நகர் என்ற பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு அதற்காக அவர் செல்போனில் இளம் பெண்கள் பெயரில் ஆபாசமாக உரையாடி வந்தார் 
 
இந்த நிலையில் தொழிலதிபர் வீட்டிற்குச் சென்று தன்னை காவல்துறையினர் என அறிமுகம் செய்துகொண்ட யுவராஜ் இளம்பெண்களுடன் ஆபாசமாக உரையாடிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போகிறேன் என்று மிரட்டியுள்ளார் 
 
இதனை அடுத்து தொழிலதிபரிடம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் 14 லட்ச ரூபாய் வேண்டும் என யுவராஜ் கேட்டதை அடுத்து அந்த தொழிலதிபர் சந்தேகமடைந்து போலீசில் புகார் கொடுத்தார்.
 
இதனை அடுத்து நடிகர் யுவராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த இளம் பெண் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.