வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2017 (21:20 IST)

மேக்-அப் இல்லாமல் ஸ்ருதியை பார்த்தால் அனைவரும் தெறித்து ஓடுவார்கள்: கன்னட நடிகர் சீண்டல்!!

நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் துருவா சார்ஜாவுக்கு ஜோடியாக கன்னட படத்தில் நடிக்க இருந்ததாக செய்திகள் வெளியானது. 


 
 
ஆனால், இந்த செய்தியை உண்மையில்லை என்று நடிகை ஸ்ருதி தனது டுவிட்டரில் பதிவிட்டார். இதனால் சக கன்னட நடிகர் ஜக்கேஷ் ஸ்ருதி ஹாசனை சாடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, கர்நாடகாவில் அழகான பெண்கள் நிறைய பேர் உள்ளனர். பிறகு ஏன் கன்னட தயாரிப்பாளர்கள் ஸ்ருதி வீட்டு வாசல் முன் நின்று பிச்சை கேட்கிறார்கள். இந்த தயாரிப்பாளர்கள் திருந்தவே மாட்டார்கள். ஸ்ருதிஹாசனை விட கர்நாடக கல்லூரி மாணவிகள் அழகானவர்கள். ஸ்ருதியை மேக் அப் இல்லாமல் பார்த்தால் அனைவரும் தெறித்து ஓடுவார்கள் என்று கூறியுள்ளார்.