செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:51 IST)

ஆரம்பம், வேலைக்காரன் படத்தில் நடித்த நடிகர் மீது போக்சோ!

அஜித் நடித்த ஆரம்பம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் மராத்தி படம் ஒன்றை இயக்கினார் 
 
இந்த படத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மகேஷ் மஞ்ச்ரேக்கர் இந்தப் படம் தணிக்கை செய்யப்படும் போது எந்தவிதமான எது ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்