திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:48 IST)

''பிக்பாஸ் ''நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் இவர்தான் !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், அடுத்ததாக இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் இந்த முடிவை எடுக்க எனக்கு ஒத்துழைப்பு அடுத்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிர்வாகத்திற்கு எனது நன்றி என்றும் கமலஹாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியவர்களின் தேதிகளை வீணடிக்கக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.