திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (21:02 IST)

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

டெல்லிக்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி  வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.