வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (11:09 IST)

வடமாநிலங்களை உறைய வைக்கும் பனி! விமான, ரயில் சேவைகள் பாதிப்பு!

Delhi mist
வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில் டெல்லியில் விமான சேவைகள், ரயில் சேவைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றது.



ஆண்டுதோறும் குளிர்காலங்களில் வட மாநிலங்களில் ஏற்படும் அதீதமான பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. காலை நேரங்களில் அருகில் சில அடி தூரத்தில் வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனி மூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மிக அதிகளவில் பனிப்பொழிவு இருப்பதால் டெல்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் சுமார் 25 ரயில்கள் டெல்லிக்கு தாமதமாக வந்துக் கொண்டிருக்கும் நிலையில், விமானங்களை இயக்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K