செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடி: நாளை அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

kejriwal
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து அவசர ஆலோசனை செய்ய அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏக்களை 20 கோடி ரூபாய் வரை கொடுத்து இழுக்க பாஜக முயற்சி செய்வதாக கூறப்பட்டது
 
அதுமட்டுமின்றி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கு கொள்ளும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது