1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2017 (08:14 IST)

ஆதார் அட்டை இல்லையா? அப்படியெனில் சி.பி.எஸ்.இ தேர்வு எழுத முடியாது

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கட்டாயம் என்ற நிலை ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. ஆதார் இல்லாமல் இனிமேல் தெருவில் கூட நடக்க முடியாது என்று கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை



 
 
இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ தேர்வுகளை எழுத தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கி தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.