திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:47 IST)

திருமண நிகழ்ச்சியில் இளம்பெண் மரணம்.. பரவலாகும் வீடியோ

andra
ஆந்திர மாநிலம் உடுப்பியில் ஒரு திருமண நிகழ்சில் பங்கேற்க மணப்பெண்ணின் உறவினப் பெண்  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவடத்தில் உள்ள ஹாவாஞ்சே என்ற இடதிதில் நேற்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், மணமக்கள் இரு வீட்டாரின் சார்பில் உறவினர்கள், விருந்தினர்கள், நண்பர்கள்  உள்ளிட்ட  பலரும் வந்திருந்தனர்.

அப்போது, மணமக்களுக்கு உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமக்களின் உறவினப் பெண் ஜோஸ்னா( 23) அங்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அவர் மயங்கிக் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கல்  அவரை மீட்டு மருத்துவமனைக்குக் ஜ் கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.

திருமணத்திற்கு வந்த இளம் வயது பெண் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Sinoj