வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (12:13 IST)

போலீஸ்காரரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த பெண்

பஞ்சாப்பில் பெண் ஒருவர் போலீஸ்காரரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற போலீஸ்காரரை கட்டிவைத்து சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இக்பால் சிங்கை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், அந்த அதிகாரி தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் தான் அவரை தாக்கினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
அதேபோல் இதுகுறித்து இக்பால் பேசியபோது, அந்த பெண்மணி உள்ளூர் கடையிலிருந்து வாசிங்மெஷின் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், அதை பற்றி விசாரிக்க அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற பொழுது அந்த பெண் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இருவரும் அளித்த புகாரின் பேரில் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.