வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (20:14 IST)

இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

influensa
இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவில்  இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.  இதனால் இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் இந்த வகை காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸினால் 15 வயதிற்குட்பட குழந்தைகள் மற்றும் முதியவர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில், இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கர்நாடக மா நிலத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில். குஜராத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 58 வயது பெண் இந்தப் புதிய வகைக் காய்ச்சலால் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

'கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5 ஆம் தேதி இந்தியா முழுவதும் 451 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் அரியானா, குஜராத் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 7 பேர் இந்த  புதிய தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும்,  மத்திய அரசு அறிவித்தது'  குறிப்பிடத்தக்கது.