திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (00:03 IST)

திருமணத்தின் போது இறந்த மணப்பெண்....தங்கையை கரம்பிடித்த மணமகன்

குஜராத் மாநிலத்தில் திருமண சடங்கின் போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பாவ்  நகரில்  ஹெடல்  மற்றும் விஷால் ராணாபாய் ஆகிய இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

சம்பவத்தன்று,மணமேடையில்,திருமண  நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.இந்த திருமணத்தின்போது,  உறவினர்கள் மணப்பெண்ணிற்கு சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, மணப்பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே மாடிக்குச் சென்ற அவர் அங்கேயே மயங்கிக் கீழே விழுந்தார்.

அவர்  மணமேடைக்கு வராததால், உறவினர்கள் மாடிக்குச் சென்று பார்த்தப்போது, அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவருக்கு முதலுதவி செய்து மீட்க முயற்சித்தனர். ஆனால், பலனளிக்காமல், அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில், மணப்பெண்ணின் தங்கையை அப்பெண்ணின் வீட்டார் விஷாலுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இத்திருமணத்தின்போது, ஹெடலின் உடல் குளிரூட்டும் பெட்டியில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.