ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (13:20 IST)

ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து ...

Accident
பீகார் மாநிலம் ராம் நகர் சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாலையில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
 
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள ராம்கர் சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லக்கிசராய் -சிக்கந்ரா சாலையில் ஆட்டோ ஒன்று 14 பயணிகளுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.
 
அப்போது, அவ்வழியே வந்த லாரி வந்த வேகத்தில் ஆட்டோ மீது மோதியது.இவ்விபத்தில்,  9பேர் உயிரிழந்தனர்.   5 பேர் படுகாமடைந்துள்ளனர்.  இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்காள்  நிலையில்,  படுகாயமடைந்தவர்களை மீட்டு  பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.