1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (12:48 IST)

ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆகக்கூடாது டா - டான்ஸ் ஆடிக்கொண்டே திருடிய திருடன்(வைரல் வீடியோ)

ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆகக்கூடாது டா - டான்ஸ் ஆடிக்கொண்டே திருடிய திருடன்(வைரல் வீடியோ)
டெல்லியில் திருடன் ஒருவன் திருடுவதற்கு முன்பாக ஜாலியாக நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடன் ஒருவன் தனது கூட்டாளிகளோடு கடைத் தெருவில் திருட சென்றுள்ளான். முதலில் சென்ற ஒருவன் தனது கூட்டாளிகளுக்காக காத்திருந்த வேளையில் ஜாலியாக டான்ஸ் ஆடியுள்ளான்.
 
பின் தனது கூட்டாளிகளோடு சென்று திருடிவிட்டு சென்றுள்ளான். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேரமாவில் பதிவாகி உள்ளது. போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர். அவர்கள் நடனமாடிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.