1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மே 2024 (17:43 IST)

அயோத்தி ராமர் கோவில் போல் சீதைக்கும் ஒரு கோவில்.. அமித்ஷா வாக்குறுதி..!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியதை போல் சீதைக்கும் ஒரு தனியாக கோயில் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதும் அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு அயோத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராமர் கோவில் திறக்கப்பட்டது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல வாக்குறுதிகள் பாஜக சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சீதைக்கு தனியாக ஒரு கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது போல் சீதா பிறந்த பூமியான சீதாமர்ஹியில் சீதாவுக்கான பிரம்மாண்டமான கோயிலை பாஜக அரசு கட்டும் என்று தெரிவித்துள்ளார் அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva