திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (07:38 IST)

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்த மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

vandhe bharth
சமீபத்தில் பிரதமர் மோடி கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த நிலையில் அந்த ரயில் மீது மர்ம நபர்கள் கல்லெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள மல்லபுரம் மாவட்டத்தில் திரு நவ்யா மற்றும் திருர் என்ற பகுதிகள் இடையே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மீது தொடர்ச்சியாக கல்லெறியும் சம்பவம் நடந்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தால் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva