திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (07:27 IST)

கொரோனா கால ஹீரோவுக்கு சிலை: கொல்கத்தாவில் ஒரு ஆச்சரியம்

கொரோனா கால ஹீரோவுக்கு சிலை: கொல்கத்தாவில் ஒரு ஆச்சரியம்
கொரனோ காலத்தில் மக்களுக்கு உதவியவர் யார் என்றால் உடனே கிட்டத்தட்ட அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே. அவர் திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும் கொரனோ காலத்தில் மக்களின் மனதில் ஹீரோவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது மட்டுமன்றி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்விற்கு தேவையான உதவிகளையும் செய்தார். பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்து உதவி செய்ததால் அவர் மக்களின் மனதில் ஹீரோவாக போற்றப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொல்கத்தாவில் தற்போது துர்கா பூஜை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதில் சோனுசூட் அவர்களுக்கு ஆளுயர சிலை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி கொரனோ காலத்தில் ஏற்பட்ட துயர சம்பவங்களை ஞாபகப்படுத்தும் சிலைகளையும் வைத்துள்ளனர்
 
குறிப்பாக ரயிலில் அடிபட்டு இறந்த புலம்பெயர் தொழிலாளிகள், பசி பட்டினியால் மாண்டவர்கள், நீண்ட தூரம் நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த சிலைகளையும் வைத்து பொதுமக்கள் துர்கா பூஜையை கொண்டாடி வருகின்றனர். இந்த சிலைகளின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது