1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (07:13 IST)

உலக கொரோனா: பாதிப்பு 4.14 கோடி, குணமானோர் 3.09 கோடி!

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியைத் தாண்டியுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,469,042 என உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,907,529 என்பதும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,425,291என்பதும், பலியானோர் எண்ணிக்கை 1,136,222என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,584,819 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 227,409 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 5,602,116 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,705,158 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 116,653 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 6,871,895 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,300,649 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 155,459 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 4,756,489 என்பதும் குறிப்பிடத்தக்கது