தொடர்புடைய செய்திகள்
- மோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் முயற்சி: காங்கிரஸ்
- நீட் தேர்வினால் மட்டும்தான் தற்கொலையா? நிர்மலா சீதாராமன்
- நீட் தேர்வினால் மட்டும்தான் தற்கொலையா? நிர்மலா சீதாராமன்
- குழந்தை இல்லாததால் மனைவி தற்கொலை; ஏக்கத்தில் கணவனும் தற்கொலை
- நான் தற்கொலை செய்துக்கொள்வேன்: பகிரங்கமாக மிரட்டும் ஆந்திர துணை முதல்வர்!
சிக்கன் சமைக்காததால் பெற்ற தாயை கொலை செய்த மகன்
ஆந்திராவில் சிக்கன் சமைக்காததால் பெற்ற தாயை, அவரது மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் கிஷோர். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கிஷோர் மதுவுக்கு அடிமையானதால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கிஷோரை விட்டு பிரிந்து சென்றனர். கிஷோர் அவரது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று சிக்கன் எடுத்து வந்த கிஷோர், தனது தாயிடம் சிக்கனை சமைத்து வைக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கிஷோர், வீட்டில் சிக்கன் சமைத்து வைக்காததால், தனது தாயுடன் வாக்கு வாதத்தில் ஈட்டுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிஷோர் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய கிஷோரை தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
