2019 ல் வரும் சூரிய கிரகணம் ஒரு பார்வை ...
2019 ஆம் ஆண்டின் இந்தியாவில் இரண்டு கிரகணங்கள் தென்படும் என வானியல் கூர்நோக்கு மையத்தில் உள்ள அறிவியலாளர்களால் சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணம் என்றால் என்ன ?
சூரியன் பூமி சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் செல்லும்போதுதான் கிரகணம் ஏற்படும். சூரியனின் மையப்பகுதி நிலவால் மறைக்கப்பட்டு தன் விளிம்பு பகுதி மட்டும் மறையாமல் இருக்கும் போது ஒரு ஒளிவளையம் போன்ற வடிவத்தில் சூரியன் காட்சியளிக்கும். இதுவே சூரிய கிரகணம். இதை சூரியனின் கங்கண கிரகணம் அல்லது வலயகிரகணம் அல்லது வளைய மறுப்பு என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
வரும் 6 ஆம் தேதி (ஜனவரி )ஞாயிற்றுக்கிழமை அன்று நம் பூமியில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது இவ்வாண்டில் நிகழும் முதல் கிரகணமாகும். சைபீரியா, சைனா, ஜப்பான் போன்ற நாட்டினர் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும். இது பகுதி கிரகணம் ஆகும் . முழு கிரகணம் சில வருடங்களுக்கு ஒருமுறை தான் நிகழும்.
இந்தக் கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைத்த கண்ணாடிகொண்டு இதைக்காணலாம். இன்னும் சொல்லப்போனால் இதைப்பார்க்காமல் இருப்பதே சிறந்தது.
நம் இந்தியாவில் இந்த கிரகணத்தைக் காணமுடியாது. ஆனால் அதன் அதிர்வுகளை நம்மால் உணரமுடியும்.
ஆனால் வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படப்போவதாகவும் அது நம் நாட்டில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
சந்திரகிரகணம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தைப்பூச தினத்திலும், மற்றொரு சந்திரகிரகணம் ஜூலை 16 , 17 ஏற்படப்போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் 2 அரிய கிரகணங்கள் தோன்றும் என்றும், உலகில் 5 கிரகணங்கள் தோன்றும் . மற்ற கிரகணங்கள் காணாமல் போகும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.