செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:09 IST)

பார்சலில் வந்த பாம்பு: அலறியடித்து ஓடிய இளைஞர்

ஒடிசாவில் பாம்பு ஒன்று பார்சலில் வந்ததால் இளைஞர் ஒருவர் அலறியடித்து ஓடியுள்ளார்.

ஒடிசாவில் ஆந்திராவை சேர்ந்த முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆந்திரா மாநிலம் குண்டூரிலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதனைத் திறந்துபார்த்த போது அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. அதன் பின்பு அந்த பொருட்களை ஓவ்வொன்றாக எடுத்து பார்த்தார்.

அப்படி பார்க்கையில் பார்சலின் அடிப்பகுதியில் இருந்த 4 அடி பாம்பு, ஒன்று திடீரென தலையை நீட்டியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்து போன முத்து அலறியடித்து கொண்டு ஓடினார். பின்னர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.