ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (14:30 IST)

41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த பாதிரியார்

manoj
பாதிரியார் ஒருவர் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகேயுள்ள உச்சக்கடை பகுதியில் வசிப்பவர் மனோஜ்(50). இவர், பெங்களூரில் ஆங்கிலிக்கன் சபை பாதிரியாராக உள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு ஐயப்பன் மீது ஈர்ப்பு இருந்ததால், 41 நாட்கள் இருந்து இருமுடி கட்டி, சபரிமலை கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

இதற்காக திருவனந்தபுரம் திருமலையில், உள்ள கோவியில் மாலை அணிந்து  கடந்த மாதம் விரதம் தொடங்கி,  தினமும் சாமி தரிசனம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 41  நாட்கள் விரதம் முடிந்ததும் பாதிரியார் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார்.

 மகாதேவர் கோயிலில் இருமுடி கட்டினார். அவருடன் ஐந்து பேர் இருமுடி கட்டி அங்கிருந்து  புறப்பட்டன  நிலையில், சபரிமலை கோவிலில் 18 ஆம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று பயபக்தியுடன்  ஐயப்பனை வழிபட்டார்.

இந்த நிலையில், பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், ஆலயத்தில், திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.