திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (07:24 IST)

பொது இடத்தில் காவல் அதிகாரி அடித்து படுகொலை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் பொதுஇடத்தில் வைத்து மர்ம நபர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை நேர்ந்தவர் அப்துல் ஷமாத் கான். இவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவார். அப்துல் நேற்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள், தாங்கள் கையில் வைத்திருருந்த தடியை வைத்து அவரை தாக்கினர்.
 
இந்த தாக்குதலில் அவர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரை சூழ்ந்து கொண்ட 3 பேர் அவரை வயதானவர் கூட என்றும் பாராமல் கொடூரமாக தாக்கினர். இதனை இவ்வழியே சென்ற ஒருவரும் தடுக்கவில்லை.
 
இதனையடுத்து அப்துல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.