திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (12:49 IST)

பாஜக எம்.பியை கொடூரமாக தாக்கிய பசு மாடு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

குஜராத்தில் பாஜக எம்.பி யை பசு மாடு ஒன்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்தவர் லீலாதர் வகேலா(83). இவர் பாஜக எம்.பி ஆவார். லீலாதர் நேற்று காலை நடைபயிற்சி செல்வதற்காக தனது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
 
அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த பசுமாடு ஒன்று லீலாதரை நோக்கி வேகமாக ஓடிவந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. மாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் முயற்சித்த போதும், மாடு அவரை விடவில்லை.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த மாட்டை அங்கிருந்து விரட்டிவிட்டு லீலாதரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாடு முட்டியதில் அவருக்கு எடுப்பு எலும்பு மற்று தலையில் காயம் ஏற்பட்டு அவர் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.