1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (14:21 IST)

டான்ஸ் ஆடிய மாணவிகள்: ஸ்டேஜ் ஏறி போலீஸ்காரர் செய்த வேலை

குடியரசு தினம் அன்று ஸ்டேஜில் நடனமாடிய மாணவிகள் மீது போலீஸ்காரர் பணத்தை அள்ளி வீசியதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கடந்த 26ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், கல்லூரிகலிலும் கொடியேற்றப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
அப்படி மகாராஷ்டிரா நாக்பூர் நகரில் உள்ள அரசு பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மாணவிகள் நடனமாடிக் கொண்டிருந்த போது, ஸ்டேஜில் ஏறிய கான்ஸ்டெபிள் தனது கையில் வைத்திருந்த பணத்தினை மாணவிகள் மீது வீசினார்.

இந்த காட்சி வெளியாகி கடும் கண்டனங்கள் கிளம்பவே, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.