திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (11:16 IST)

அஜித்தை ஃபாலோ பண்ணுங்கப்பா.... ரசிகர்களுக்கு ’போலீஸ் அதிகாரி ’அட்வைஸ்...

வேற ஒண்ணும் இல்லீங்க.., அஜித் கார், பைக் ரேஸர் அப்பிடீனு நம்ம எல்லோருக்குமே தெரியும் அவர் சினிமா மற்றும் நிஜத்துல பைக் ஒட்டிச் செல்லும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது போல அவரது ரசிகர்களும் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
விஸ்வாசம் படம் சம்பந்தமாக சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
அண்மையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தைப் பார்த்தேன். அதில் கதாநாயகன் நாயகி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து கொண்டு செல்வார்கள்.அதேபோல் தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கதாநாயகன் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்து கொள்வது. குழந்தைகளின் கனவை எட்ட துணை  நிற்பது. மாறாக தம் கனவுகளை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது.
லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுகையில் அவரது ரசிகர்களும் கட்டாயம் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, கதாநாயகன் அஜித், அவரது குழுவினருக்கு பாராட்டுக்கள் இவ்வாறு இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.