புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டி உள்ளார் 
 
இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அதன் பிறகு இது புரளி என்பது தெரியவந்தது
 
 இதனை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் தான் மிரட்டல் விடுத்தது என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது