செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:38 IST)

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தடுத்ததை போலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் சம்மந்தமாக அவ்வப்போது சர்ச்சையாகவும், பரபரப்பாகவும் செய்திகள் இணையம் மற்றும் ஊடகங்களில் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சென்னை காவல்நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவரின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் உடனடியாக விஜய் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த தகவல் வெறும் புரளிதான் என்று தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும் இதுபோல தமிழ் நடிகர்கள் சிலரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.