வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (11:16 IST)

தண்டவாளத்தில் விழுந்த 1 வயது குழந்தை: நூழிலையில் தப்பித்த அதிசயம்

உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
 
உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஊருக்கு செல்ல ரயிலில் ஏறினார்.
 
அப்போது சோனூ மனைவி கையில் இருந்த குழந்தை தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அதற்குள் ரெயில் வேமாக புறப்பட்டு சென்றது. குழந்தை தண்டவாளத்தின் கம்பிக்கும், பிளாட்பார சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டது.
 
நல்ல வேலையாக குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்தது. ரயில் சென்றதும் வாலிபர் ஒருவர் குழந்தையை எடுத்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.