1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (12:13 IST)

பாலிவுட் நடிகை, நேஹா துாபியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது !

பிரபல பாலிவுட் நடிகை, நேஹா துாபியாவுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
கடந்த, 2002ல், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றவர் நேஹா துாபியா.  ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். 38 வயதாகும் நேஹா துபியா, 35 வயதாகும் ஹிந்தி நடிகர் அங்கத் பேடி, என்பவரை கடந்த மே மாதம், திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், நேஹா துாபியாவுக்கு,  பெண் குழந்தை பிறந்தது. இதனால் திருமணத்தின் போதே, நேஹா, கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
 
இதன்காரணமாகவே டெல்லியில் உள்ள குருத்வாராவில் அவசரமாக நேஹா, அங்கத் பேடி ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். நடிகர் - நடிகைகள், நண்பர்கள் என யாரையும் இவர்கள் அழைக்கவில்லை.